ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்தார் நவ்ஜோத் சிங் சித்து

0 2124

34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில், உச்சநீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நீதிமன்றத்தில் நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்தார்.

1988 ஆம் ஆண்டு சாலையில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் சித்துவும், அவரது நண்பரும் சேர்ந்து 65 வயதான குர்நாம்சிங்கை தாக்கியதில் அந்த நபர் உயிரிழந்தார். இது தொடர்பான மறு ஆய்வு வழக்கில், சித்துவுக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

மருத்துவ காரணங்களை காட்டி தாம் சரணடைய சித்து அவகாசம் கோரியிருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டதை அடுத்து பாட்டியாலா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments