நன்கு படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர் - அமைச்சர் ராஜ்நாத் சிங் கவலை

0 2434
நன்கு படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர் - அமைச்சர் ராஜ்நாத் சிங் கவலை

நன்கு படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கவலை தெரிவித்துள்ளார்.

புனேயில் தனியார் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி உரையாற்றிய அவர், அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தகர்ப்பில் விமானிப் பயிற்சிபெற்ற இளைஞர்கள் ஈடுபட்டதை நினைவுகூர்ந்தார். பெரிய நிறுவனங்களிலும், தீவிரவாத இயக்கங்களிலும் உள்ளவர்கள் நன்கு படித்துள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

நல்ல நிறுவனங்களில் உள்ளவர்கள் சமுதாயத்துக்குப் பணியாற்றுவதாகவும், தீவிரவாத அமைப்பில் உள்ளவர்கள் பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்துவதாகவும் கூறிய அவர் நல்ல குறிக்கோளுடன் செயல்படும்படி மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments