ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் பணியாளரை காலால் எட்டி உதைத்த அதிகாரி.. சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

0 3053

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பணியாளரை, அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைக்கும் காணொலி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

கர்ணன் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், செயல் அலுவலர் அறைக்கு நாற்காலியை எடுத்து சென்ற கர்ணனை, சக பணியாளர்கள் முன்னிலையில் கோவில் கணக்கர் சுப்பையா எட்டி உதைப்பது கண்காணிப்பு கேமரா-வில் பதிவாகி உள்ளது.

இது தொடர்பாக சுப்பையா-வை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை ஏற்கவில்லை.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments