பெருவில் 37 ஆண்டுகளுக்குப் பின் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு.!
பெருவில், 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட்டு கொல்லப்பட்ட கிராம மக்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அக்கோமார்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் இடதுசாரி கொரில்லா போராளிகள் பதுங்கியுள்ளதாக கருதி ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 23 சிறுவர்கள் உள்பட 69 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் பல ஆண்களை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று விட்டு உடல்களை எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
37 ஆண்டுகளுக்கு பின் இறந்தவர்கள் உடல்களில் எஞ்சிய பாகங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Comments