விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி விற்பனை - அமைச்சர் ஐ.பெரியசாமி
கூட்டுறவுத் துறை நடத்தி வரும் 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் சந்தைவிலையை விடக் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகம், ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் மழை பெய்து வருவதால் தக்காளி வரத்துக் குறைந்து ஒரு கிலோ 120 ரூபாய் வரை வெளிச்சந்தையில் விற்பனையாவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விலையைக் கட்டுப்படுத்தச் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் கூட்டுறவுத் துறையின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய் வரை விற்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேவையின் அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Comments