நகைக்கடையில் இருந்து 1 சவரன் மதிப்பிலான தங்க நாணயங்கள் திருடிச்சென்ற குருவிக்கார பெண்கள்..
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் பிரபல நகைக்கடையில் இருந்து 1 சவரன் மதிப்பிலான தங்க நாணயங்களை திருடிச்சென்ற விழுப்புரத்தை சேர்ந்த 2 குருவிக்கார பெண்களை போலீசார் கைது செய்தனர். அந்த பெண்கள் திருடிச்சென்ற காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தன.
புகாரின் பேரில் இருவரையும் தேடி வந்த போலீசார் ஈரோடு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த போது, பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Comments