ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை - ரயில்வே அமைச்சர்
ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்று ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஐடி மாணவர்களின் அடுத்த தலைமுறை போக்குவரத்து மாற்றத்திற்காக ஹைப்பர் லூப் திட்டத்திற்கு 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மத்திய ரயில்வே சார்பில் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தமிழகத்தில் எழும்பூர்,காட்பாடி,மதுரை,ராமேஸ்வரம், கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் 760 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட உள்ளதாக கூறினார். விரைவில் புறநகர் ரயில்களில், மெட்ரோ ரயில்களைப் போன்று ஏசி வசதி செய்யும் பணிகள் துவங்கப்படும் என்று தெரிவித்தார்.
யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க, யானைகள் கடக்கும் இடங்களில் தண்டவாளங்கள் உயர்த்தப்பட்டு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Comments