அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போருக்குப் புதிய வசதி

0 19463
அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் பிற வங்கிகளுக்கும், பிற வங்கிகளில் இருந்தும் மின்னணு முறையில் பணத்தைப் பரிமாற்றும் வசதி மே 31ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் பிற வங்கிகளுக்கும், பிற வங்கிகளில் இருந்தும் மின்னணு முறையில் பணத்தைப் பரிமாற்றும் வசதி மே 31ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

வங்கிக் கணக்கு வைத்திருப்போர் நெப்ட், ஆர்டிஜிஎஸ் ஆகியவற்றின் மூலம் உடனடியாக மின்னணு முறையில் பணத்தைப் பிற வங்கிக் கணக்குகளுக்கு மாற்றும் வசதி ஏற்கெனவே உள்ளது.

இந்நிலையில் அஞ்சலகச் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் பிற வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தைப் பரிமாற்றவும், பிற வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தைப் பெறவும் அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது. இதனால் விடுமுறை நாட்களிலும் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். FT, RTGS

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments