சாலைத் தகராறில் ஒருவரைக் கொன்ற வழக்கில் நவ்ஜோத் சிங் சித்துக்கு ஓராண்டு சிறைத் தண்டனை..
1988ஆம் ஆண்டு சாலைத் தகராறில் ஒருவரைக் கொன்ற வழக்கில் நவ்ஜோத் சிங் சித்துக்கு உச்ச நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
சாலையில் வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட தகராறில் குர்ணாம் சிங் என்பவரை வாகனத்தில் இருந்து வெளியே இழுத்த சித்து கைகளால் குத்தியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் கொலைக் குற்றச்சாட்டில் இருந்து அவரை விசாரணை நீதிமன்றம் விடுவித்தது.
மேல்முறையீட்டில் பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்றம் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதில் வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகக் கூறி ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்துக் குர்ணாம் சிங்கின் குடும்பத்தினர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சித்துக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.
Comments