கல்குவாரி விபத்து.. கனிமவளத்துறை உதவி இயக்குனர் விநோத் பணியிடை நீக்கம் - ஆட்சியர்

0 3110

நெல்லை அருகே கல்குவாரியில் ராட்சதப் பாறை உருண்டு விழுந்த விபத்து தொடர்பாக, கனிமவளத்துறை உதவி இயக்குனர் விநோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

அடைமிதிப்பான்குளம் குவாரி இடிபாடுகளில் சிக்கிய 6ஆவது நபரை மீட்கும் பணியை பார்வையிட்டபின் பேட்டியளித்த அவர், சிறிய அளவில் வெடிவைத்து பாறைகளை தகர்த்து மீட்புப் பணி நடைபெறுவதாக கூறினார்.

இதனிடையே, குவாரி உரிமையாளர் செல்வராஜின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மற்றும் அவரது மகனின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் சரவணன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments