கிண்டி கொரோனா மருத்துவமனை முதியோருக்கான மருத்துவமனையாக மாற்றப்படும் - மா.சு
சென்னை கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனையில் நோயாளிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், அது முதியோருக்கான மருத்துவமனையாக மாற்றப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 14 டயாலிசிஸ் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றபின் பேட்டியளித்த அவர், ஒரு மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் முதியோருக்கான மருத்துவமனை, இந்தியாவின் முதல் முதியோர் மருத்துவமனையாக இருக்கும் என்றார்.
நூறு ஆண்டுகள் பழமையான சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை 40 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என்றும், ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Comments