பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் யாசின் மாலிக் குற்றவாளி எனத் தீர்ப்பு
பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டிய வழக்கில் ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி என டெல்லியில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், குற்றச்சதி, தேசத்துரோகம் உள்ளிட்ட பல பிரிவுகளில் யாசின் மாலிக் மீது தேசியப் புலனாய்வு முகமை குற்றஞ்சாட்டியது.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி தேசியப் புலனாய்வு முகமை நீதிமன்றம், யாசின் மாலிக் குற்றவாளி என இன்று தீர்ப்பளித்தது. தண்டனை பற்றிய விவரம் மே 25ஆம் நாள் அறிவிக்கப்பட உள்ளது.
Comments