தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 3029

தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், சேலம், கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக அம்மையம் கணித்துள்ளது.

இதேபோல், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

வரும் 23ஆம் தேதி வரை கேரள கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் அப்பகுதிக்க்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments