இந்திய பங்குச்சந்தைகளில் வணிகம் வீழ்ச்சி
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் தொள்ளாயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தொடங்கியதில் இருந்தே இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.
இன்று முற்பகல் 11 மணியளவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 987 புள்ளிகள் சரிந்து 53 ஆயிரத்து 222 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 301 புள்ளிகள் சரிந்து 15 ஆயிரத்து 939 ஆக இருந்தது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குவிலை 4 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது.
Comments