பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் பாலாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
ஆம்பூரில் இருந்து குடியாத்தத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் கடந்த ஆண்டு வெள்ளத்தால் இரண்டாக உடைந்தது. இதையடுத்து தற்காலிகமாக மண்ணைக் கொட்டி நிரப்பி தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தொடர் கனமழையால் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அரிப்பு ஏற்பட்டு தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
Comments