பெண்ணுக்கு டிப்ளமோ பட்டம் வழங்க மருத்துவமனைக்கு நேரில் சென்ற பல்கலை கழக அதிகாரிகள்

0 3189

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு டிப்ளமோ பட்டத்தினை பல்கலைக்கழகம் நேரில் சென்று வழங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  Dillard பல்கலைக் கழகத்தில் Jada Sayles என்ற இளம்பெண் டிப்ளமோ படிப்பினை நிறைவு செய்துள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழா கடந்த 14ந்தேதி நடைபெற்றது. ஆனால் 13ந்தேதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த  Jada Sayles பிரசவ வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரால் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த பல்கலைக்கழக நிர்வாகம் அவருக்கு வழங்க வேண்டிய டிப்ளமோ பட்டத்தை மருத்துவமனைக்கு நேரில் சென்று வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது. அந்த பெண்ணும் குழந்தை பிறந்த மகிழ்ச்சி ஒருபுறம், பட்டம் பெற்ற மகிழ்ச்சி மறுபுறம் என இரட்டை மகிழ்ச்சியில் திளைத்தார்.

Jada went into labor on Friday evening. Texted me around 4:30 am Saturday saying she was being admitted, & the baby was born on her graduation day, May 14th. So we rolled up to the hospital so I could finish my tenure in the most special way. #myDU pic.twitter.com/JieETrXVgy

— Walter M. Kimbrough (@HipHopPrez) May 15, 2022 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments