உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவால் வறுமை பஞ்சம் அதிகரிக்கும்-அமெரிக்கா
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவால் இந்த ஆண்டு 4 கோடி பேர் கூடுதலாக வறுமைக்கும் உணவுப் பஞ்சத்துக்கும் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கியின் கணிப்பை சுட்டிக் காட்டி ஐநா.சபையில் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஐநாவின் உயர் மட்டக்கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், மனிதாபிமான உதவியாக உணவுப் பாதுகாப்புக்கு அமெரிக்கா சார்பில் மேலும் 215 மில்லியன் டாலர் உதவி நிதியை அறிவித்தார்.
ஏற்கனவே அமெரிக்கா 2 புள்ளி 3 பில்லியன் டாலர் நிதியை அவசர உணவுத் தேவைகளுக்காக வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
Comments