தங்கை மீது கை வைத்தால் ஒரு தலை காதலனை காலி செய்த அண்ணன்..! காதல் டார்ச்சருக்கு கத்தியால் பதில்

0 14006

திருமணமான பெண்ணை விரட்டி விரட்டி காதலிக்க வற்புறுத்திய இளைஞரை, பெண்ணின் சகோதரர் துரத்திச் சென்று கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பிதார் நகரிலுள்ள சிங்கார்பாக் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் ஜிஷான். இவரது தங்கையை அமீர்கான் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

ஜிஷான் தங்கைக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணமாகிய நிலையிலும் அமீர்கான் விரட்டி விரட்டி காதலிப்பதாக கூறி சுற்றியுள்ளார். இதனால் தங்கையின் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட வேண்டாம் என அமீர்கானை, ஆட்டோ ஓட்டுனர் ஜிஷான் பலமுறை எச்சரித்துள்ளார்.

ஜிஷானின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத அமீர்கான், அவரது தங்கைக்கு காதல் என்ற பெயரில் பாலியல் தொந்தரவு கொடுக்கும் அளவுக்கு சென்றதாகக் கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரமடைந்த ஜிஷான் சம்பவத்தன்று தன் தங்கைக்கு தீரா தொல்லையனாக மாறிப்போன அமீர்கானை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இந்தக் சம்பவம் அமீர்கான் பணிபுரியும் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமீர்கான் தாய் கொடுத்த புகாரின் பேரில் பீதர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுனர் ஜிஷானை கைது செய்தனர். சினிமாபாணியிலான இந்த கொலைச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments