இந்தியா-வங்கதேசம் இடையே மீண்டும் ரயில்சேவை

0 2591

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே பயணிகள் ரயில் சேவை வருகிற 29 ந்தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கொரோனா காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச்சில் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ரயில் சேவையை துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டாக்காவிலிருந்து கொல்கத்தா-டாக்கா மைத்ரீ எக்ஸ்பிரஸ் மற்றும் கொல்கத்தாவிலிருந்து கொல்கத்தா-குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் வருகிற 29 முதல் மீண்டும் தொடங்கும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் என்.ஜே.பி-டாக்கா மிடாலி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் வருகிற ஜூன் 1ந்தேதி முதல் துவங்கப்பட உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments