தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், வடமாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக இன்று மேற்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
நாளை மேற்கு மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. மே 20 முதல் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறப்பிட்டுள்ளது.
அடுத்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
Comments