70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 3.25 அடி நீள முதலையின் புதைபடிவம் கண்டுபிடிப்பு..!
தென் அமெரிக்க நாடான பெருவில் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முதலையின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதைபடிவங்களுக்கு பெயர் பெற்ற கடற்கரை நகரமான அரிகுய்பா-வில் இந்த மூனேகால் அடி நீள புதைபடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் கடலுக்கடியில் வாழ்ந்து வந்த முதலைகள் எப்படி நிலத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு இடம்பெயர்ந்தன என்பதை அறிய இந்த புதைபடிவம் உதவியதாக அவர்கள் தெரிவித்தனர்.
Comments