சிதம்பரத்தில் ஆயுதப் படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடைத்தாள் பாதுகாப்பு பணியில் இருந்த ஈடுபட்டிருந்த ஆயுதப் படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சிதம்பரம் தில்லையில், அரசு பொதுத்தேர்வு பிளஸ்-2 வினாத்தாள்கள் வைத்திருக்கும் தனியார் பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை காவலர் பெரியசாமி ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை பெரியசாமி பாதுகாப்புக்கு வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகக் கூறப்படும் நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments