ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பாக்.நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.. பாகிஸ்தானின் தீர்மானத்தை நிராகரித்தது இந்தியா..!
ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா நிராகரித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தாக்கல் செய்த தீர்மானத்தில், ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை நிராகரித்துள்ள வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தர் பக்சி, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி இதில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எல்லை மறுசீரமைப்பு ஜனநாயக ரீதியாக நடைபெறுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Comments