பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனின் விடுதலை கோரிக்கை மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
தன்னை விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய அரசு சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. விவகாரம் ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி பரிசீலிக்கப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆளுநரின் நடவடிக்கையில் தாமதம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
Comments