ரஷ்யாவின் எச்சரிக்கையை மீறி நேட்டோவில் இணைய பின்லாந்து விண்ணப்பம்
ரஷ்யாவின் கடுமையான எச்சரிக்கைகளை மீறி பின்லாந்து நாடாளுமன்றம் நேட்டோ கூட்டமைப்பில் இணையும் பரிந்துரைக்கு ஆதரவாக வாக்களித்தது.
இதனைத் தொடர்ந்து நேட்டோ உறுப்பினராக சேர்வதற்கு பின்லாந்து விண்ணப்பிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாயந்த இந்த வாக்கெடுப்பில் 188 எம்பிக்கள் நேட்டோவில் இணையும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தநர். எட்டு பேர் மட்டுமே எதிர்த்தனர்.
பின்லாந்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நீண்ட கால நட்பை சுட்டிக் காட்டி ரஷ்யா வலியுறுத்திய போதும் உக்ரைன் போருக்குப் பிறகு எல்லாமே மாறிவிட்டதாக பின்லாந்து பதில் அளித்துள்ளது.
Comments