இடப்பிரச்சனை காரணமாக கூலி தொழிலாளி வீடியோ பதிவு செய்து வைத்துவிட்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி

0 3147
இடப்பிரச்சனை காரணமாக கூலி தொழிலாளி வீடியோ பதிவு செய்து வைத்துவிட்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி

கரூர் அருகே இடப்பிரச்சனை காரணமாக கூலி தொழிலாளி ஒருவர், வீடியோ பதிவு செய்து வைத்துவிட்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தவிட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர், தனது பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டிற்கு அவரது தாய்மாமன்கள் ரமணி, கருணாநிதி, சின்னசாமி ஆகியோர் உரிமை கோரியதாக கூறப்படுகிறது. இதனால், இரு தரப்பினர் இடையே அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த இளங்கோவன், தனது தற்கொலைக்கு தாய்மாமன்கள் தான் காரணம் எனக்கூறி வீடியோ பதிவு செய்து வைத்துவிட்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இளங்கோவின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments