ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அதிக வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது அமெரிக்க விமானப்படை
ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அதிக வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று தெற்கு கலிபோர்னியா கடற்பகுதியில், பி-52 பாம்பர் ரக விமானத்தில் இருந்து அந்த ஏவுகணை சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து அதனை ஏவியதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி அதன் பூஸ்டர் இயங்கி, ஒலியை விட ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் பாய்ந்து சென்றதாக விமானப்படை குறிப்பிட்டுள்ளது.
தாங்கள் மட்டுமே ஹைப்பர் சோனிக் ஆயுதங்களை உருவாக்குவதில்லை என கூறிய அமெரிக்க ராணுவ அதிகாரிகள், ரஷ்யா அந்த ஆயுதத்தை உக்ரைனில் பயன்படுத்தியதாகவும், சீனாவும் அதனை பரிசோதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
Comments