இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியுற்றது.
கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி இலங்கையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று காலை இலங்கை நாடாளுமன்றம் கூடிய நிலையில், கோத்தயப ராஜபக்சேவுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தார்.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 68 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்ட 119 பேர் எதிராக வாக்களித்ததால், தீர்மானம் தோல்வியடைந்தது.
Comments