பன்னிரண்டாம் வகுப்பு தேர்வர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ எடை கொண்ட மைக்ரோ பிட் பேப்பர்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் இன்று +2 மாணவர்களுக்கு கணிதத் தேர்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு தொடங்குவதற்கு முன், தேர்வுத்துறை இணை இயக்குனர் பொன் குமார் தலைமையிலான பறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களை பரிசோதனை செய்தனர்.
அந்த சோதனையில், கொல்லிமலையில் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள், குமாரபாளையத்தில் 20 மாணவர்கள் , பள்ளிபாளையத்தில் 3 மாணவர்களிம் என சுமார் 1 கிலோ எடை கொண்டு மைக்ரோ பிட் பேப்பர்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மைக்ரோ பிட் எடுத்த ஜெராக்ஸ் கடையின் உரிமையாளரிடம் விசாரனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments