வட கொரியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.. மருந்து விநியோகிக்கும் பணியில் ராணுவ வீரர்கள்.!
வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருந்துகள் விநியோகிக்கும் பணிக்காக அந்நாட்டு அரசு ராணுவ வீரர்களை களமிறக்கியுள்ளது.
கடந்த 12ம் தேதி முதன்முறையாக கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக வடகொரிய அரசு ஒப்புக் கொண்டது. அதன் பிறகு தற்போது வரையில் நோய் பாதிப்புக்கு 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிப்புகள் 10 லட்சத்தை எட்டியிருக்கும் நிலையில், அந்நாட்டில் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், வடகொரியாவில் மருந்தகங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட உத்தரவிட்ட அதிபர் கிம் ஜாங் உன், தலைநகர் பியாங்யாங்கில் மருந்துகளை விநியோகிக்கும் பணிகளை ராணுவ வீரர்கள் கவனித்துக் கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Comments