துக்க நிகழ்ச்சியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் போலீசாருக்கும் இடையே மோதல்.!
அல் அக்ஸா மசூதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலால் உயிரிழந்த நபரின் இறுதி ஊர்வலத்தில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
கடந்த மாதம் 22-ந் தேதி நடைபெற்ற இந்த மோதலில், வலீத்-அல் ஷரீப் என்ற அந்த நபர் உள்பட 30 பேர் காயமடைந்தனர்.
சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் போலீசார் மீது கற்கள் மற்றும் பட்டாசுகளை வீசினர். பதிலுக்கு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை அப்புறப்படுத்தினர்.
Comments