ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை.!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. தொடர்ந்து பெய்த மழை மற்றும் தக்காளி உற்பத்தி சீசன் இல்லாத காரணத்தால் இந்த சந்தைக்கு தினந்தோறும் 500 முதல் 700 தக்காளி பெட்டியில் வரவு வருகிறது.
இந்த வரவு குறைவு காரணமாக தக்காளியின் விலை படிப்படியாக உயர்ந்து 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி ஆயிரத்து 200ரூபாய் வரை விலை போனது.
தக்காளி விலை உயர்வு இன்னும் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு இருக்கும் என்று வியாபாரிகளும், விவசாயிகளும் கூறுகின்றனர்.
Comments