வால்பாறையில் முள்ளம் பன்றியால் தாக்கப்பட்ட புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தகவல்
கோவை மாவட்டம் வால்பாறையில் முள்ளம் பன்றியால் தாக்கப்பட்ட புலிக்குட்டிக்கு வேட்டையாட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட முடீஸ் பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு ஒரு புலிக்குட்டி உடல் முழுவதும் முள்ளம்பன்றியின் முட்கள் குத்தி காயங்களுடன் போராடிக்கொண்டு இருந்தது. முள்ளம்பன்றியை வேட்டையாடியதால் அதன் உடல் முழுவதும் முள்குத்தப்பட்டு இருந்ததுடன், உடலுக்குள்ளும் அதிகளவில் முட்கள் இருந்தன.
இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக வன துறை அதிகாரிகள் அந்த புலிக்குட்டியை மீட்டு அதற்கு சிகிச்சை அளித்தனர். புலிக்குட்டி எளிதாக வேட்டையாடி பழகும் வகையில் முதலில் அந்த கூண்டுக்குள் முயல், காட்டுப்பன்றி விடப்படுகிறது.
6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு உடல்நிலை, வேட்டையாடும் திறன் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு, உயரதிகாரிகள் அனுமதியுடன் அந்த புலிக்குட்டி வனப்பகுதியில் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments