பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களுக்கு வலைவீச்சு
சென்னையில் இளைஞர்கள் சிலர் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படும் நிலையில், அது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலத்தைச் சேர்ந்த பழைய குற்றவாளியான ஆனஸ்ட்ராஜ் என்பவர் தனது கூட்டாளிகளுடன் கத்தியால் கேக் வெட்டியுள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள், இணையதளத்தில் பரவிய நிலையில் சென்னை காவல்துறையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டிய ஆனஸ்ட்ராஜ், மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Comments