12-ம் வகுப்பு மாணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்

0 4369
12-ம் வகுப்பு மாணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் முத்துடையான் பட்டியில் 12-ம் வகுப்பு மாணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூங்குடி கிராமத்தை சேர்ந்த குணாளன் என்ற மாணவன் கடந்த 13 -ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், உடன் சென்ற மற்றொரு இளைஞன் மீது சந்தேகம் இருப்பதாக கூறி திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடைபெற்றது.

தகவல் அறிந்து சென்ற குளத்தூர் வட்டாட்சியர் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments