கடந்த நிதியாண்டில் ஒடிசா மாநில அரசு 19,000 கோடி ரூபாய் கடன் தொகையை திரும்ப செலுத்தி உள்ளதாக தகவல்
சில மாநில அரசுகள் அதிக வட்டிக்கு கூட கடன் வாங்க முடியாமல் தவித்து வரும் நிலையில், ஒடிசா மாநில அரசு கடந்த நிதியாண்டில் 19,000 கோடி ரூபாய் கடன் தொகையை திரும்ப செலுத்தி உள்ளது.
இரும்பு, நிக்கல், பாக்சைட், நிலக்கரி உள்ளிட்ட கனிம வளங்களுக்கு பெயர் பெற்றது ஒடிசா மாநிலம். கடந்த நிதியாண்டு கனிம வள சுரங்கங்கள் மூலம் 15,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், சர்வதேச சந்தையில் விலை அதிகரித்ததால், 48,000 கோடி ரூபாய் வருவாயை அம்மாநில அரசு ஈட்டியது.
இதனால் கடன் பத்திரங்கள் மூலம் 20,465 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டிருந்த ஒடிசா அரசு அம்முடிவை கைவிட்டது. மேலும், 19,102 கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பி செலுத்தி உள்ளது. இந்தாண்டும் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டாமல் இருக்க ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது.
Comments