தடுப்பூசி செலுத்தாத வட கொரியாவில் வேகமெடுக்கும் கொரோனா பரவல் ; பாரம்பரிய வைத்திய முறைகளை பின்பற்றும் பொதுமக்கள்
வடகொரியாவில் யாரும் கொரோனா தடுப்பூசி செலுத்தாத நிலையில், கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் மக்கள் உப்பு தண்ணீரால் வாய் கொப்பளிப்பது, மூலிகை தேநீர் அருந்துவது உள்ளிட்ட பாரம்பரிய வைத்திய முறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளனர்.
வட கொரியாவில், இதுவரை 8 லட்சத்து 20 ஆயிரம் பேர் காய்ச்சல் அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 நாட்களில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை நோயாளிகள் தனிமைப்படுத்திகொள்ளுமாறு மட்டும் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது காய்ச்சல் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளுமாறு அந்நாட்டு அரசு பரிந்துரைத்துள்ளது.
Comments