வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

0 3893

வட தமிழக கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சேலம், தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, சேலம், பெரம்பலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

வரும் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments