திரிபுரா அமைச்சரவையில் 11 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்பு..!

0 2630

திரிபுரா மாநிலத்தில் 11 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர்.

முதல்வராக இருந்த பிப்லப் குமார் தேப் ராஜினாமா செய்த நிலையில் மாணிக் சாஹா புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

அகர்தலாவில் நேற்று நடைபெற்ற எளிய நிகழ்வில், ஆளுநர் எஸ்.என்.ஆர்யா, முதலமைச்சர் மாணிக் சாஹாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், இன்று 9 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பிப்லப் குமார் தேப் அமைச்சரவையில் பழங்குடியின மக்கள் நலத்துறையை கவனித்த மேவர் குமார் ஜமாதியாவை தவிர மற்ற அனைவரும் புதிய அமைச்சரவையில் இடம் பெற்று, மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments