11ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த சக மாணவன்.. பருமனாக இருப்பதை கேலி செய்ததால் ஆத்திரத்தில் கொலை..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 11ஆம் வகுப்பு பள்ளி மாணவனை கத்தியால் குத்தி கொலை செய்த சக மாணவன் பிடிபட்டான்.
சந்தப்பேட்டை புறவழி சாலையில் நேற்று முன்தினம் காலை 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவன் கை மற்றும் கழுத்துப் பகுதிகளில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தவன் கீரனூரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் கோகுல் என்பது தெரிய வந்தது. மேலும் அவனை பிறந்த நாள் விழாவுக்கு அழைத்துச் சென்ற சக நண்பனை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அப்போது மாணவனை கொலை செய்ததை ஒப்பு கொண்ட அந்த மாணவன், தான் பருமனாக இருப்பதால் அடிக்கடி கேலி செய்ததை தாங்க முடியாத ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிவித்தான்.
Comments