நெல்லை கல்குவாரி விபத்து நடந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - அப்பாவு

0 3400

நெல்லை கல்குவாரி விபத்து நடந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே அடைமிதிப்பான்குளத்தில் கல்குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சிக்கினர். மீட்கப்பட்ட மூவரில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியில்  சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகன் மற்றும் விஜய் ஆகியோருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் அறிவிக்கப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments