கொரோனாவுக்கு உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் - நிபுணர்கள்
வடகொரியாவில் கடந்த வியாழக்கிழமை முதல் முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், காய்ச்சல் பாதிப்புக்கு மேலும் 15 பேர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சலால் இதுவரை 42 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில், 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 பேருக்கு காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டிருப்பதாக வடகொரிய அரசு செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் முதலே பலருக்கும் காய்ச்சல் பரவியதாக கூறியுள்ள வடகொரியா, சரியாக எத்தனை பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் என்ற விவரங்களை வெளியிடவில்லை.
Comments