மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் காட்டு விலங்குகள் நடமாட்டம்.. விலங்குகளை கண்காணித்து விரட்ட சிறப்பு குழு..!
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டு விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இரவு நேரங்களில் தனியாக மக்கள் வெளியே வர வேண்டாம் என களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அடுத்த மாதம் முந்திரி உள்ளிட்ட பழங்களின் சீசன் தொடங்குவதால் கரடி, குரங்கு, நரி, யானை உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் மலையடி வாரத்தில் அதிகம் இருக்கும் என வனத்துறை தெரிவித்துள்ளனர்.
தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் விலங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க, திருப்பி அனுப்ப வனத்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments