பெஷாவார் தாக்குதலுக்கு காரணமான முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொலை - பாகிஸ்தான் ராணுவம்

0 3232

57 பேரை பலி கொண்ட பெஷாவர் தாக்குதலின் முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.


பெஷாவரில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த மார்ச் 4-ந்தேதி தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 57 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

பெஷாவர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹாசன் ஷா பதுங்கியிருந்த இடம் பற்றிய தகவல் கிடைத்ததன் பேரில் ராணுவ வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹாசன் ஷா மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் என 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments