மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

0 3069
மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.

ஹமா மாகாணத்தில் உள்ள மாஸ்யஃப் பகுதியில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், அங்குள்ள வனப்பகுதியிலும் தீப்பிடித்துள்ளது.

பன்யாஸ், டார்டவுஸ், ஜாப்லே கடற்கரை நகரங்களிலும் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. இந்நிலையில், பெரும்பாலான ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழித்திருப்பதாக சிரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments