சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், நடிகர் மோகன் லாலுக்கு அமலாக்கத்துறையினர் சம்மன்?
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் நடிகர் மோகன் லாலுக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மோன்சன் மவுங்கல் என்பவர் பழங்கால பொருட்கள் எனக்கூறி போலியானவற்றை விற்று 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
திப்பு சுல்தானின் கிரீடம் முதல் அவுரங்சீப்பின் மோதிரம் வரை தன்னிடம் இருப்பதாகக்கூறி மோன்சன் நம்பவைத்ததாக புகாரளிக்கப்பட்டது. மேலும், மோன்சனின் பண மோசடி குறித்து அமலாக்கத்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கலூரில் உள்ள மோன்சனின் வீட்டிற்கு மோகன்லால் சென்றதாக கூறப்படும் நிலையில், அவரிடம் விசாரிக்க முடிவு செய்த அமலாக்கத்துறை, அடுத்த வாரம் ஆஜராக சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Comments