ரஷ்யாவுக்கு உதவுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் ; ஜி 7 கூட்டமைப்பு நாடுகள் சீனாவுக்கு வலியுறுத்தல்
ரஷ்யாவுக்கு உதவுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஜி 7 கூட்டமைப்பு நாடுகள் சீனாவை வலியுறுத்தியுள்ளன.
ஜெர்மனியின் பாலிடிக் கடற்கரையில் நடைபெற்ற மூன்று நாள் மாநாட்டிற்கு பிறகு அந்த நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கையை நியாயப்படுத்தக் கூடாது எனவும் சீனாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் போர் நடவடிக்கை உலக அளவில் உணவு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது எனவும், இது ஏழை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியாத வகையில், ரஷியா தடுத்துள்ள நிலையில், அதனை சரிசெய்து தானிய ஏற்றுமதியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
Comments