விசாரணை கைதி கொல்லப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை
சென்னையில் விசாரணை கைதி கொல்லப்பட்ட வழக்கில் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக தலைமை செயலக காலனி போலீசாரால் கைது செய்யப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்ததை அடுத்து, கொலை வழக்காக மாற்றி போலீசார் 6 பேரை சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
இந்த நிலையில், அயனாவரம் உதவி ஆணையர் சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கும், காவல் ஆய்வாளர் செந்தில்குமாரை தென் மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
Comments