திரிபுரா புதிய முதலமைச்சராக மாணிக் சாகா தேர்வு

0 2965

திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாணிக் சாகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த பாஜகவின் பிப்லப் தேப் இன்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், அகர்தலாவில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சராக மாணிக் சாகா தேர்வாகினார். பல் மருத்துவரான மாணிக் சாகா, 2020ஆம் ஆண்டு முதல் திரிபுரா மாநில பாஜக தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார்.

அம்மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய முதலமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, திரிபுரா பா.ஜ.க. தலைவராக பிப்லப் தேப் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments