கழுத்தில் தாலி.... கையில் பேனா.... திருமணம் முடிந்த கையோடு செமஸ்டர் தேர்வு எழுதிய மணப்பெண்
கர்நாடகாவில் திருமணம் முடிந்த கையோடு கல்லூரி மாணவி ஒருவர் மணப்பெண் கோலத்திலேயே செமஸ்டர் தேர்வு எழுதியுள்ளார்.
பாண்டவபுராவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வரும் ஐஸ்வர்யா என்ற மாணவிக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது.
நேற்றைய தினமே செமஸ்டர் தேர்வுகளும் தொடங்கிய சூழலில், காலையில் திருமணத்தை முடித்துவிட்டு, மணப்பெண் கோலத்திலேயே தேர்வறைக்கு சென்று அந்த மாணவி தேர்வு எழுதினார்.
Comments